Monday, October 22, 2012

புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை விழா 2012

 புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை விழா 
13.10.2012

புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி காளிபாளையத்தில் உள்ள நம் குல தெய்வமான ஶ்ரீதேவி பூதேவி நாச்சியார் ஸமேத ஶ்ரீதிருமலைராயபெருமாள் திருக்கோவிலில் நடந்த விழாவிற்கு ஊர்கவுண்டர் தங்கவேலு தலைமை வகித்தார்.கோவில் கமிட்டி செயலாளர் ஆர்.ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.திருப்பள்ளியழுச்சியுடன் தொடங்கிய இதில் தொடர்ந்து மேட்டுப்பாளையம் நடூரைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்ட பிருந்தாவன பஜனை செய்தனர்.பின்னர் உற்சவ மூர்த்திகளுக்கு பன்னிருவகை திரவியங்களுடன் திருமஞ்சனம் நடந்தது.பின்னர் நாலாயிர திவ்யப்பிரபந்த சேவிப்பும்,விஷ்ணு சஹஸ்ரநாம பாராயாணமும் நடந்தது.இதனையடுத்து துளசி மற்றும் வில்வ மாலைகளுடன் பெருமாள் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.தொடர்ந்து அன்னதானம் நடந்தது.இவ்விழாவில் கர்நாடகா,கேரளா மாநிலங்கள் மற்றும் கோவை,நீலகிரி,திருப்பூர்,ஈரோடு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


 

                                                                             

புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை விழா (13.10.2012)


 புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை விழா 
13.10.2012புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை விழா


Monday, July 16, 2012

Kovil Mandapam Constructions Invitation: திருப்பணி வேண்டுகோள்
நம் திருக்கோவிலில் முன்மண்டபம் கட்டுமானப்பணிக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பாக பெரியதிருவரங்கம் இராமானுஜக்கூடத்தின் 50ஆவது பீடாதிபதி ரங்கநாராயண ஜீயர் ஸ்வாமிகள் மங்களாசாசனம் செய்து அடிக்கல் நாட்டினார்கள்.தற்போது அப்பணி தொடங்கப்பட்டுள்ளது.இத்துடன் கருடாழ்வார்,ஆண்டாள் நாச்சியார்,கிருஷ்ணன் திருவுருவங்கள்,மடப்பள்ளி ஆகியவை உருவாக்கும் திருப்பணியும் நடக்கின்றன.இத் தெய்வங்களின் திருவுருவங்கள் தற்போது சிமெண்டில் செய்யப்பட்டுள்ளன.இவை சிதிலமடைந்து விட்டன.இதனால் இவற்றை கற்களினால் உருவாக்கி பிரதிஷ்டை செய்து இவற்றிற்கு இரும்பு கம்பித் தடுப்புகளும் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.இத்திருப்பணிக்கு உதவ விருப்பமுள்ளோர் கோவில் தலைவர் ஆர்.விஜயகுமாரையோ (செல்:98425-63953) அல்லது செயலாளர் ஆர்.ஆறுமுகத்தையோ (94434-72753) தொடர்பு கொள்ளலாம்.

முன்மண்டபம் கட்டுமான திருப்பணி: இக்கட்டுமானப் பணிகளுக்கான பாலாலய பூஜை 15.7.2012 அன்று கோவிலில் நடந்தது.தீர்த்த கலசங்களுக்கு சிறப்புப் பூஜை.வேள்வி,சக்தியை கண்ணாடியில் ஏற்றுதல், சிறப்புத் திருமஞ்சனம் ஆகியன நடத்தப் பெற்றன.குலப்பெரியோர்கள் ரங்கசாமி,தங்கராஜ் ஆகியோர் தலைமையில் வீரபாண்டி வரதாச்சாரியார் பூஜையை நடத்தி வைத்தார்.நடூர்,பெ.நா.பாளையம் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tuesday, April 17, 2012

THELUNGU NEW YEAR CELEBRATION


THELUNGU NEW YEAR CELEBRATION
Sponsered by Sri Ramalingam Family.Mettuppalayam Nadur. Special Guest Sri.Chinna Raj,Kendepalayam.Local Children and others participated. and also distibuted prasad

2012 ஆம் ஆண்டு தெலுங்கு வருடப் பிறப்பு சிறப்பு விழா நடூரிலுள்ள நம்குலத்தைச் சேர்ந்த ராமலிங்கம் குடும்பத்தினர் பொறுப்பேற்று நடத்தினர்.பெருமாளுக்கு பன்னிருவகை அபிஷேகங்கள் செய்யப்பட்டு விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் தீர்த்தப் பிரசாதம் வழங்கப்பட்டது.சிறப்பு அழைப்பாளராக கெண்டே பாளையத்தைச் சேர்ந்த சின்னராஜ் கலந்து கொண்டார். 
Karuda Panchami Celebrations


Karuda Panchami Celebrated in our temple.Sri.Kanndasan Family Sponsered this Celebration.All Governing body members of temple and well wishers attented.
கருடபஞ்சமி விழா நம் கோவிலில் கருடபஞ்சமி விழா கட்டளைதாரர் திரு.கண்ணதாசன் தலைமையில் சிறப்பாக நடந்தது.இதில் அவரது குடும்பத்தினர் கோவில் நிர்வாகக் குழு உறுப்பினர்கள்,நலம் விரும்பிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.விழாவில் அனைவருக்கும் தீர்த்தப் பிரசாதம் வழங்கப்பட்டது.