Thursday, November 27, 2014

காளிபாளையத்தில் ஶ்ரீ திருமலைராயப் பெருமாள் புரட்டாசி கடைசி சனிக்கிழமை விழா பெரியநாயக்கன்பாளையம் அருகே காளிபாளையத்தில் உள்ள பகிடி கத்துலு குலத்தாரின் குலதெய்வமான ஶ்ரீதவி பூதேவி சமேத ஶ்ரீதிருமலைராயப் பெருமாள் கோவிலில் புரட்டாசி கடைசி வார விழா மிகச்சிறப்பாக நடந்தது.திருவாய்மொழி சேவா காலத்துடன் பூஜைகள் தொடங்கின.தொடர்ந்து உற்சவருக்கு பன்னி்ரு வகை அபிஷேகமும்,சிறப்பு வழிபாடும் நடத்தப்பட்டன.இதற்கு கோவில் தலைவர் இரா.விஜயகுமார்,செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் தலைமை வகித்தனர்.குலப்பெரியவர்கள் முன்னின்று பூஜைகளை நடத்திக் கொடுத்தனர்.ஏராளமான பங்காளிகள் கலந்து கொண்டு தங்கள் குழந்தைகளுக்கு முடி காணிக்கை அளித்தனர்.விழாவில் கோவில் வரவு செலவு காண்பிக்கப்பட்டது.சிறப்பு கட்டளைதாரர்கள் கௌரவிக்கப்பட்டனர்.பின்னர் நடந்த அன்னதானம் நடந்தது.விழாவில் கோவை,நீலகிரி,ஈரோடு மாவட்டங்கள் மற்றும் கேரளா,கர்நாடகா மாநிலங்களிலிருந்தும் வந்திருந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.




























Friday, October 3, 2014

புரட்டாசி கடைசி சனிக்கிழமை வாரவிழா 18.10.2014 (ஐப்பசி- 1)

அன்புடையீர், வணக்கம்.
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகில் காளிபாளையத்தில் எழுந்தருளி அருள்பாலித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ திருமலைராய பெருமாள் நமது பயிடு கொத்தார் குலத்தாரின் குலதெய்வமாகும். நம் கோவிலின் இந்த ஆண்டு (2014) புரட்டாசி கடைசி சனிக்கிழமை வாரப் பெருவிழா வரும் 18.10.2014 (ஐப்பசி-1) அன்று கீழ்கண்ட முறையில் சிறப்பாக நடைபெற உள்ளது.

இந்த கடைசி வார விழா குறித்து உங்கள் ஊரில் உள்ள நம்முடைய மற்ற தாயாதிகளுக்கு தகவல் தெரிவித்து குடும்பத்துடன் வர செய்ய வேண்டும். மேலும் தாங்களும் தவறாது குடும்பத்துடன் இவ்விழாவில் கலந்து கொள்ள வேண்டும்.விருப்பமுள்ளவர்கள் இவ்விழா நன்றாக நடப்பதற்கு பூஜை பொருட்களோ அல்லது நிதியையோ நன்கொடையாக வழங்கலாம்.



Sunday, March 30, 2014

பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஶ்ரீ கரிவரதரா஦ பெருமாள் கோவிலில் நடந்து வரும் பிரம்மோற்சவ விழா

:பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஶ்ரீ கரிவரதரா஦ பெருமாள் கோவிலில் நடந்து வரும் பிரம்மோற்சவ விழாவில் ஶ்ரீகரிவரதராஜ பெருமாள் மற்றும் ஆதிமூர்த்தி பெருமாள் இருவரும் இரண்டு கருடாழ்வர்களின் மீது பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

ஒவ்வொரு பிரம்மோற்சவத்தின் போதும் கருடசேவை தினத்தன்று பழையபுதூரில் உள்ள ஶ்ரீ ஆதிமூர்சத்தி பெருமாளும்,.கரிவரதராஜ பெருமாளும் ஒருசேர கருடன் மேல் எழுந்தருளி ஊர்வலமாக வருவர்.இந்த சிறப்பு நிகழ்ச்சியையொட்டி ஶ்ரீ வில்லிப்புத்தூரிலிருந்து கொண்டு வரப்பட்டிருந்த ஆண்டாள் மாலை பழையபூதூரிலிருந்து பெரியநாயக்கன்பாளையத்திற்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன.இதற்கு இருகோவில்களின் அறங்காவலர்களான ஆர்.ராஜேந்திரன்,ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆண்டாள் மாலைக்கு யூனியன் டேங்க் பிரிவில் பூர்ண கும்ப மரியாதையுடன் சிறப்பு வரவேற்பளிக்கப்பட்டது.பின்னர் திருகோவில் மண்டபத்தில் இருபெருமாள்களுக்கும் ஶ்ரீ ராமானுஜர் மங்களாசாசனம் செய்து வைத்தார்,.பின்னர் ராமானுஜருக்கு எதிர்சேவை சாதித்தபடி இருபெருமாள்களும் சிறப்பு அலங்காரத்தில் நகரின் முக்கிய வீதிகளில் திருவீதி உலா கண்டனர்.வைஷ்ணவ வீதி,ஜடல் நாயுடு வீதி,ரங்கநாதபுரம் பகுதி கோஷ்டியினர் சிறப்பு வரவேற்பளித்தனர்.இருகோவில்களின் பஜனைக்குழுக்கள்,.ஆண்டாள் குழுக்கள்,பாலர் கோஷ்டியினர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கணக்கானோர் திரளாகப் பங்கேற்று பிருந்தாவன  பஜனை நடத்தியபடி ஆடிபாடி ஊர்வலமாக வந்தனர்.நரசிங்கமூர்த்தி,அநுமன்,கண்ணன் வேடமணிந்த பாகவத கோஷ்டியினர் பக்தர்களை உற்சாகப்படுத்தியபடி வலம் வந்தனர்.இறுதியில் அனைவருக்கும் தீர்த்தப் பிரசாதம் வழங்கப்பட்டது.தொடர்ந்து நடந்த விழாவில் கஜவாகனத்திலும்,திருதேரிலும் பெருமாள் எழுந்தருளி அருள்பாலித்தனர்.இதற்கான ஏற்பாடுகளை ஶ்ரீ கரிரதராஜ பெருமாள் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்,. 

                                                                               
       




















Tuesday, January 28, 2014

ராமர் பஜனைகுழு பாதயாத்திரைக்கு வரவேற்பு- 26.1.2014

எண்.4 வீரபாண்டி மாரியம்மன் கோவிலில் உள்ள ஶ்ரீராமர் பஜனைக்குழுவினர் கடந்த 32 வருடங்களாக கோவை மாவட்டம் ஒன்னிபாளையம் அருகிலுள்ள ஶ்ரீ கோமாளி அரங்கன் கோவிலுக்கு பஜனை பாதயாத்திரையாக செல்வது வழக்கம்.வழக்கம்போல் 26.1.2014 அன்று பாதயாத்திரை உற்சவம் நடந்தது.இவர்களுக்கு கோவிலின் சார்பில் சடகோபனின் ஆராதனையும் வரவேற்பு அளிக்கப்பட்டது.கோவில் சிறப்பு திருவாராதனைகள் செய்யப்பட்டதுடன் அனைவருக்கும் தீர்த்தப் பிரசாதமும் வழங்கப்பட்டன.