Sunday, March 30, 2014

பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஶ்ரீ கரிவரதரா஦ பெருமாள் கோவிலில் நடந்து வரும் பிரம்மோற்சவ விழா

:பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஶ்ரீ கரிவரதரா஦ பெருமாள் கோவிலில் நடந்து வரும் பிரம்மோற்சவ விழாவில் ஶ்ரீகரிவரதராஜ பெருமாள் மற்றும் ஆதிமூர்த்தி பெருமாள் இருவரும் இரண்டு கருடாழ்வர்களின் மீது பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

ஒவ்வொரு பிரம்மோற்சவத்தின் போதும் கருடசேவை தினத்தன்று பழையபுதூரில் உள்ள ஶ்ரீ ஆதிமூர்சத்தி பெருமாளும்,.கரிவரதராஜ பெருமாளும் ஒருசேர கருடன் மேல் எழுந்தருளி ஊர்வலமாக வருவர்.இந்த சிறப்பு நிகழ்ச்சியையொட்டி ஶ்ரீ வில்லிப்புத்தூரிலிருந்து கொண்டு வரப்பட்டிருந்த ஆண்டாள் மாலை பழையபூதூரிலிருந்து பெரியநாயக்கன்பாளையத்திற்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன.இதற்கு இருகோவில்களின் அறங்காவலர்களான ஆர்.ராஜேந்திரன்,ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆண்டாள் மாலைக்கு யூனியன் டேங்க் பிரிவில் பூர்ண கும்ப மரியாதையுடன் சிறப்பு வரவேற்பளிக்கப்பட்டது.பின்னர் திருகோவில் மண்டபத்தில் இருபெருமாள்களுக்கும் ஶ்ரீ ராமானுஜர் மங்களாசாசனம் செய்து வைத்தார்,.பின்னர் ராமானுஜருக்கு எதிர்சேவை சாதித்தபடி இருபெருமாள்களும் சிறப்பு அலங்காரத்தில் நகரின் முக்கிய வீதிகளில் திருவீதி உலா கண்டனர்.வைஷ்ணவ வீதி,ஜடல் நாயுடு வீதி,ரங்கநாதபுரம் பகுதி கோஷ்டியினர் சிறப்பு வரவேற்பளித்தனர்.இருகோவில்களின் பஜனைக்குழுக்கள்,.ஆண்டாள் குழுக்கள்,பாலர் கோஷ்டியினர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கணக்கானோர் திரளாகப் பங்கேற்று பிருந்தாவன  பஜனை நடத்தியபடி ஆடிபாடி ஊர்வலமாக வந்தனர்.நரசிங்கமூர்த்தி,அநுமன்,கண்ணன் வேடமணிந்த பாகவத கோஷ்டியினர் பக்தர்களை உற்சாகப்படுத்தியபடி வலம் வந்தனர்.இறுதியில் அனைவருக்கும் தீர்த்தப் பிரசாதம் வழங்கப்பட்டது.தொடர்ந்து நடந்த விழாவில் கஜவாகனத்திலும்,திருதேரிலும் பெருமாள் எழுந்தருளி அருள்பாலித்தனர்.இதற்கான ஏற்பாடுகளை ஶ்ரீ கரிரதராஜ பெருமாள் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்,.