Kaalipalayam (Payidu Kotthar Kula Theivam - Arunthathiar Community) Near Periyanaickenpalayam, Tamil Nadu, Coimbatore 641 020. Temple History
Wednesday, November 11, 2015
புரட்டாசி கடைசி சனிக்கிழமை- 2015 வாரவிழா
புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள பல்வேறு பெருமாள் கோவில்களில் கருடவாகனத்தில் எழுந்தருளி சேவை சாதித்தார். பெரியநாயக்கன்பாளையத்தையடுத்த வீரபாண்டி அருகிலுள்ள காளிபாளையத்தில் உள்ள ஶ்ரீதேவி பூதேவி சமேத ஶ்ரீ திருமலைராய பெருமாள் கோவிலில் கடைசி சனிக்கிழமை பெருவிழா திருவாய்மொழி சேவாகாலத்துடன் தொடங்கியது.பின்னர் பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம் பஜனைக் குழுக்களின் நாமசங்கீர்த்த பஜனை நடந்தது.இதனையடுத்து ஶ்ரீ திருமலைராய பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்தது.இதற்கு காளிபாளையம் ஊர் கவுண்டர் தங்கவேலு தலைமை வகித்தார்.கவுன்சிலர் பிரபாகரன் முன்னிலை வகித்தார்.இதனையடுத்து மஹா தரிசன வழிபாடு நடைபெற்றது.பின்னர் பஜனைப் பாடல்களின் தொகுப்பாக ஶ்ரீ ரங்கராஜம் பஜே என்ற புத்தகம் வெளியீட்டு நிகழ்ச்சி நடந்தது.இதனை லோக்ஜன சக்தியின் மாவட்ட செயலாளர் சி.பழனிச்சாமி வெளியிட பிரபந்த பஜனை அன்பர்கள் பெற்றுக்கொண்டனர்.பின்னர் அன்னதானம் நடந்தது.இவ்விழாவில் கர்நாடகம்,கேரளா மாநிலங்கள் மற்றும் கோவை,நீலகிரி,திருப்பூர்,ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Posts (Atom)