Thursday, April 23, 2015

மங்களாசாசனம் பெரியநாயக்கன்பாளையத்தில் நடந்து வரும் ஶ்ரீ ராமாநுஜர் திருநட்சத்திர விழாவிற்கு ஶ்ரீ ரங்கம் கூரத்தாழ்வான் வம்சத்தைச் சேர்ந்த வேத வியாச பட்டருடைய திருக்குமாரர் செந்தாமரைக் கண்ணன் பட்டர் திங்கள்கிழமை எழுந்தருளி மங்களாசாசனம் செய்தார்.உடன்,கரிவரதராஜ பெருமாள் கோவில் பட்டர் ஸ்வாமிகள் மற்றும் ராமாநுஜர் கூட நிர்வாகிகள்.


Periyanaiacken Palayam Sri Ramanujar Thiru Natchatra Vizha 2015- Bajanotsavam. பெரியநாயக்கன்பாளையத்திலுள்ள ஶ்ரீ ராமாநுஜர் கூடத்தில் நடந்து வரும் ஶ்ரீ ராமாநுஜர் திருநட்சத்திர விழாவையொட்டி தொடர் பஜனோத்ஸவ விழா நடந்தது. ஶ்ரீ எம்பெருமானாக் தர்சன ஐக்கிய சபை சார்பில் நடைபெறும் இந்த பத்துநாள் உற்வசத்தில் முக்கிய நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இதனை கரிவரதராஜ பெருமாள் கோவில் பட்டர் ஸ்வாமிகள் தொடக்கி வைத்தார்.முதலில் கரிவரதராஜ பெருமாளுக்கும்,ஶ்ரீ ராமாநுஜருக்கும் சிறப்பு ஆராதனைகளும்,நாலாயிர திவ்ய பிரபந்த சேவா காலமும் நடந்தன.தொடர்ந்து காலை 9 மணி முதல் இரவு 9 மணிவரை கரிவரதராஜ பெருமாள் கோவில்,பெரியநாயக்கன்பாளையம் விவேகானந்தபுரம்,நரசிம்மநாயக்கன்பாளையம்,பழையபுதூர் ஆதிமூர்த்தி பெருமாள் கோவில்,வீரபாண்டி ஶ்ரீ ராமர் பஜனை கோஷ்டியினரின் பஜனைகளும்,மணிஷாவின் பாண்டுரங்கன் பஜனையும் நடைபெற்றன.இரவு ஶ்ரீ ராமாநுஜர் திருவீதி உலா கண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.பின்னர் ததியாராதனை நடந்தது.விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை கோவில் ஶ்ரீராமாநுஜர் கூடத்தின் நிர்வாகிகள் கோவிந்தராஜ்,பாலசுந்தரம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.